தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் ஜூலை 7-ஆம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோகச் செயற்பொறியாளர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி நகர் 110/22KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, வரும் 07.07.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நகரின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1-ஆம் கேட், 2-ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு.

வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், மேலசண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார் புரம்.

எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள்காலனி, சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம்.

பக்கீள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.