கடம்பூர் அருகே 16 வயது மைனர்  பெண்ணை  திருமணம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை  கடந்த (14.06.2021) அன்று, கே.சிதம்பரபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன் (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  மாரியம்மாள், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு,  முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.