தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஒரே நாளில் நேற்று ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறையையொட்டி நேற்று கடைகளில் கூட்டம் அலைமோதியது.  தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டும், ஞாயிற்று கிழமை ஊரடங்கை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதனால், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வைக்க நேற்று திரளானோர் குவிந்து விட்டனர்.  தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஒரே நாளில் நேற்று ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில் அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.  இதுதவிர, மதுரை- ரூ. 59.63 கோடி, கோவை- ரூ.56.37 கோடி, திருச்சி- ரூ.56.72 கோடி மற்றும் சேலம்- ரூ.55.93 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.