ஆலைகளை மூடு; இல்லையேல் தேர்தல் இல்லை... தூத்துக்குடி கிராம மக்கள் திடீர் முடிவு!
நிருபர்
March 21, 2026
தங்கள் பகுதியில் இயங்கி வரும் மீன் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் ஒருமனதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக 21 அம்சக் கோரிக்கைகளை மு

தங்கள் பகுதியில் இயங்கி வரும் மீன் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் ஒருமனதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக 21 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

பொட்டலூரணி பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் 3 மீன் கழிவு ஆலைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆலைகளுக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். தூத்துக்குடி - நெல்லை தடத்தில் செல்லும் பேருந்துகள் பொட்டலூரணி விலக்கு பகுதியில் நின்று செல்ல வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியிலிருந்து பிரித்து, பொட்டலூரணியைத் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். ஆள்நடமாட்டம் குறைவான பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் (High-mast lights) அமைக்கப்பட வேண்டும். உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்தத் தேர்தல் புறக்கணிப்பு முடிவு குறித்து, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில் ஊர் மக்கள் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், தமிழக ஆளுநர், தலைமைச் தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கியத் துறை அதிகாரிகளுக்குத் தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வாழ்வாதாரமும் சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்," எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே இந்தப் பகுதியில் உள்ள மீன் கழிவு ஆலைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில், தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்தத் தேர்தல் புறக்கணிப்பு ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.