தட்டார்மடம் அருகே முதியவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார்.

தட்டார்மடம் அருகேஉள்ள அழகப்ப்புரத்தைச் சேர்ந்தவர் சு.  மகாராஜா (65). இவருக்கு மனைவி செல்லக்கிளி மற்றும் 2 ஆண் பிள்ளைகளும் , 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில்  இருந்து  வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஜாவுக்கும் அவரது  மனைவிக்கு கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்துவந்ததாம். இந்நிலையில் திங்கள்கிழமை   மனைவிக்கும் இவருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டைவிட்டு வெளியே  சென்றாராம். பின்னர்  வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில்  பெரியதாழை – மணபாடு சாலையில் மகாராஜா விஷம் குடிந்து மயங்கி கிடந்ததை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில்  தட்டார் மடம்  காவல் ஆய்வாளர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.