18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார். முதல்வர்

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (24.11.2020) தலைமைச் செயலகத்தில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்த அந்தோணி செல்வராஜ்   மகன் செல்வன் அ.அஜய் ஜோன்ஸ்க்கு கருணை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்  தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா  20 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் ரூபாயும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதல்வா்
27.5.2018 அன்று உத்திரவிட்டப்படி, வழங்கப்பட்டுவிட்டது. மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார்கள்.அதன்படி, தமிழக முதல்வா் 27.9.2018 அன்று மொத்தம் 18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜ் என்பவரின் மகன் செல்வன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதினை  தற்போது எய்தியதால், அவருக்கு இன்று தமிழக முதல்வா், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளராக பணி புரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கி  ஆறுதல் கூறினார்.

தமிழக முதல்வரிடமிருந்து பணிநியமன ஆணையினை பெற்றுக் கொண்ட செல்வன் அஜய் ஜோன்ஸ், தனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதியுதவியும், அரசு பணிக்கான பணிநியமன ஆணையும் வழங்கியமைக்காக  தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இதன்மூலம், தமிழக முதல்வா் ஆணையின்படி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின்  வாரிசுதாரர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் சண்முகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், மற்றும் அரசு  உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.