<p><b>சாத்தான்குளத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஜமாத்து தலைவர் முகமது சாதிக் தலைமையில் நடந்தது. முகாமில் சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சிகிச்சை குறித்த ஆலோசனைகளை பெற்றனர்.</b><br></p><p>முகாமில், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, தோல் நோய், குடல் புண், நெஞ்சு எரிச்சல், சிறுநீர்க்கல், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டன. கலந்துகொண்டு சிகிச்சை பெற்ற பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.&nbsp;</p><p>இம்முகாமில் நலம் மருத்துவமனை பிரபு முருகேசன் வரவேற்றார். நலம் மருத்துவமனை டாக்டர்கள் பிரசாத், அஜய் ராஜா, செந்தில் குமார் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர்.</p>