திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர்
நிருபர்
April 16, 2022
திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர்

திருநங்கைகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு உதவிகள் என பல சலுகைகளை வழங்கி வருகிறது.

திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த திருநங்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் கொடுத்து உபசரித்து மரியாதை அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி அலுவலகத்தில் திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் கௌதம், சுதாகர், உள்பட பலர் உள்ளனர்.