தூத்துக்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் மறைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு பாஜக நிர்வாகிகள் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் குரூஸ்புரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்,  நேற்றைய தினம் ( 4.6 .21 ) இந்திய பிரதமர் நாரேந்திர மோடியின் படம்  மறைக்கபட்டு இருப்பதாக தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு  தகவல் வந்துள்ளது.

அதனையடுத்து, வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று ( 5.6.21 ) பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் கிழக்கு மண்டல தலைவர் சந்தனகுமார், வடக்கு மண்டல தலைவர் எஸ்.பி.எஸ் கனகராஜ் ,  பொதுச் செயலாளர் வி.எஸ்.ஆர் பிரபு, மேற்கு மண்டல அமைப்பாளர் பாலமுருகன், மான்சிங், இசக்கி முத்து, பொய்சொல்லான், வெற்றி வேல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைக்காக பிரதமர் படம் மறைக்க பட்டு இருந்ததாதகவும், தற்போது அதனை சரி படுத்தி விட்டதாகவும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் வடபாகம் காவல் துறையினர் சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சமாதானம் அடைந்த பாஜக வினர் அங்கிருந்து கிளம்பினர்.

பிரதமர் மோடியின் படம் மறைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற பாஜக நிர்வாகிகள் நிகழ்வால் சிறிது நேரம் அங்கு பரபரப்பாக கானப்பட்டது.