தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தூத்துக்குடி, காமராஜர் புரம் பகுதியில்,  தூத்துக்குடி சங்கரபேரியை சேர்ந்த பாண்டி மகன் ராஜேந்திரன்(50), தூத்துக்குடி வெல்லன்  குளியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன்(40), தூத்துக்குடி சமர் வியாஸ் நகரைச் சேர்ந்த மதுரை வீரன் மோகன் பலவேசம் (42) மற்றும் தாளமுத்து நகர் சன்னியாசி தெருவைச் சேர்ந்த மணிராஜ் மகன் வீரா (27)  ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து , தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகளும் ரூபாய் 1,00,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.