கல்வி கடன் வேண்டுமா? தேவையான ஆவணங்களுடன் பிப். 27-ல் தூத்துக்குடிக்கு வாங்க... கலெக்டர் தகவல்!
நிருபர்
February 24, 2026
பொருளாதாரத் தடையின்றி மாணவ, மாணவியர் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற உதவும் வகையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

பொருளாதாரத் தடையின்றி மாணவ, மாணவியர் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற உதவும் வகையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாவட்டத்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், வங்கியாளர்களை ஒருங்கிணைத்து, வருகின்ற 27.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு, தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கடன் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில், 2024-2025 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நடப்பு ஆண்டில் இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் சேர்ந்திருக்கும் மாணவர்கள், ஏற்கனவே கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் (Existing Students) மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம்.

கடனுக்காக விண்ணப்பிக்க வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் (இணை விண்ணப்பதாரர்), மாணவர்களுக்கான ஆவணங்கள் பெற்றோருக்கான ஆவணங்கள், ஆதார் அட்டை & பான் கார்டு, 10, +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுச் சான்றிதழ் (TC) & சாதி சான்றிதழ், வங்கி கணக்கு பாஸ் புக், போனாஃபைட் சான்றிதழ் (Bonafide), வருமானச் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம் (Fee Structure) செலுத்திய கட்டண ரசீதுகள், முதலாம் பட்டதாரி சான்றிதழ் (தேவையிருப்பின்) உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.

மாணவர்கள் நேரில் வருவதற்கு முன்பாக https://pmvidyalaxmi.co.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கல்வி கடனுக்காகப் பதிவு செய்து கொள்ளலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள், இத்திட்டத்தின் கீழ் கற்பிப்பு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் இதர சிறப்புக் கட்டணங்களை கடனாகப் பெற முடியும்.

மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. தகுதியுள்ள மாணவர்கள் இந்த முகாமினை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.