தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களை வீடுதோறும் கொண்டு செல்லும் நோக்கில், திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும்  தமிழ்ப்  பெண்கள்' என்ற மாபெரும் பரப்புரை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் இப்பரப்புரை தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.சி. சண்முகையா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகளிர் அணியின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டு, பரப்புரைக்குச் செல்லும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழுத் தலைவர் ஜெசி பொன்ராணி,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாரதா பொன்னிசை, ஒட்டப்பிடாரம் தொகுதி 'வெல்லும்  தமிழ்ப் பெண்கள்' பரப்புரை பொறுப்பாளர்  மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய - பகுதி செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.