தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 22.11.2025 முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இன்று (23.11.2025) பிற்பகல் 3 மணி நிலவரப்படி,  மருதூர் அணைக்கட்டிலிருந்து  சுமார் 15250 கன அடியும் , திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 11060 கனஅடி நீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

அதே போல், கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே, மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக ஏரல் பாலத்திற்கு அருகிலும், ஆத்தூர் பாலத்திற்கு அருகிலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.