இரவோடு இரவாக சென்ற சண்முகையா எம்.எல்.ஏ!
நிருபர்
May 16, 2025
ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு கிராமத்தில் சூறாவளி காற்று, மழையின் காரணமாக மின் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு கிராமத்தில் சூறாவளி காற்று, மழையின் காரணமாக மின் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு கிராமத்தில் நேற்று (15.05.2015) மாலை வீசிய பலத்த சூறாவளி காற்று, மழையின் காரணமாக மின் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன.

இதனையடுத்து, தகவலறிந்து உடனடியாக இரவு நேரம் என்றும் பாராமல், நாளை காலை போய் பார்ப்போம் என்று கடந்து போகாமல் உடனடியாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நாரைக்கிணறு கிராமத்திற்கு நேரில் சென்று சரிந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தினார். அதே இடத்தில் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

மேலும், கிராம பொதுமக்களிடம் சேதங்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்து தங்களுக்கு தேவையானதை விரைந்து செய்து தருகிறேன் எனவும் எம்எல்ஏ தெரிவித்தார்.

அப்போது, மின்வாரிய செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி பொறியாளர்கள், ராஜேஷ், பால்முனியசாமி, திமுக கிளை செயலாளர்கள் மனோகரன், வினோத் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.