ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைவெள்ள நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குப்பட்ட ரஹ்மத் நகர் தெருக்கள், முத்தம்மாள் காலனி துடிசியா, டாக்டர் செல்வராஜ் மருத்துவமனை, ஆதிபராசக்தி நகர், வெங்கடேஸ்வரா அழகர் ஸ்டோர், KTC நகர், ஹவுசிங் போர்டு,  ஓம் சாந்தி நகர், நேதாஜி நகர், ராம் நகர், அய்யனார் காலனி, கொத்தனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாநேரில் சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை  பார்வையிட்டார்.

மேலும் மின் மோட்டார் தேவைப்படும் இடங்களில் உடனடியாக மின் மோட்டார் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தண்ணீரை வெளியேற்றுவதற்கு மின் மோட்டார்கள் தடையில்லாமல் இயங்கவும் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையாளர் முனீர் அஹமத்,  உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், திமுக பகுதி செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் வேல்முருகன், வட்ட செயலாளர் தெய்வேந்திரன் மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், மகளிரணி பௌஷியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.