புதியம்புத்தூரில் பொதுமக்களை துரத்தும்வெறி நாய் : 11 பேர் காயம்!
நிருபர்
July 27, 2024
புதியம்புத்தூரில் பொதுமக்களை துரத்தும்வெறி நாய் : 11 பேர் காயம்!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது இந்நிலையில் நேற்று இரவு 3 நபர்களையும் இன்று காலையில் எட்டு நபர்களையும் கடித்துள்ளது. வெறி நாய் கடித்த 11 நபர்களுக்கும் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து புதியம்புத்தூர் தெற்கு காலனி தெருவை சேர்ந்த அர்ச்சுனன் (45) என்பவர் கூறுகையில்:-

நண்பர் ஒருவருடன் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பஜாருக்கு செல்லும்போது வெறிநாய் ஒன்று கடித்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் கடித்துள்ள நிலையில் புதியம்புத்தூரில் பல தெரு நாய்கள் அலைகிறது. அதேபோல் வெறி நாய்களும் அலைவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரு நாய்கள் மற்றும் வெறி நாயை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வெறிநாய்க்கடித்து 11 பேர் காயமடைந்த சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.