குளத்தூர் கண்மாயில் வண்டல்/கரிசல் மண் எடுக்க ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்!
நிருபர்
July 08, 2024
குளத்தூர் கண்மாயில் வண்டல்/கரிசல் மண் எடுக்க ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்!
<p><b>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட குளத்தூர் தெற்கு கண்மாயில் புல எண்: 215-ல் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு, கட்டணமின்றி வண்டல் மண் மற்றும் களிமண் அள்ளுவதற்கு தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. </b></p><p>மேற்படி ஆணையின்படி, இன்று (08.07.2024) திங்கள் கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி குளத்தூர் தெற்கு கண்மாயில் இருந்து வண்டல்/கரிசல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு அள்ளுவதற்கான அனுமதி ஆணையை விவசாயிகளிடம் வழங்கினார்.</p><p>இந்தநிகழ்வில், கனிமவளத்துறை உதவி இயக்குநர், பொதுப்பணித்துறை அலுவலர்கள், விளாத்திகுளம் வட்டாட்சியர், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் மற்றும் அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.</p>