தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளரை சரக்கு  வாகனத்தை வைத்து மோதவிட்டு கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கீழ தெருவை சேர்ந்தவர் பாலு (56). இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு ஏரல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொது அருகில் உள்ள உணவகத்தில் வாலிபர் ஒருவர்  தகராறு செய்து கொண்டிருந்ததாகவும், பாலு அந்த வாலிபரை சத்தம்போட்டு அனுப்பியுள்ளார்.

பின்னர், பாலு இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக  சென்றுகொண்டிருந்த பொது புரோட்டா கடையில் தகராறு செய்த வாலிபர் பாலு மீது லோடு வேனை ஏற்றியுள்ளார். இதில் கீழே விழுந்த பாலு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏரல் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி துரை கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து, கொலை செய்த வாலிபரை 10 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது