பசுபதி பாண்டியன் அவர்கள் 9வது நினைவு தினம் - வெளி மாவட்ட நபர்களுக்கு அனுமதி இல்லை!
நிருபர்
January 08, 2021
பசுபதி பாண்டியன் அவர்கள் 9வது நினைவு தினம் - வெளி மாவட்ட நபர்களுக்கு அனுமதி இல்லை!

தூத்துக்குடியில் வரும் 10.01.2021 அன்று பசுபதி பாண்டியன் 9 வது நினைவு தினம் வர இருப்பதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளி மாவட்ட நபர்கள் யாரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக இந்த ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வரும் ஜனவரி 10ம் தேதி தூத்துக்குடியில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்த வெளிமாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் எவரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

மேலும் மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்ட கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஊர்வலங்கள், இருசக்கர வாகனங்களில் பேரணியாக வருவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை, உள்ளுர் அஞ்சலி செலுத்துபவர்களும் காவல் துறை அனுமதித்துள்ள வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களில் வரும் போது கோஷம் போடுவது, ஒலி எழுப்புவது போன்றவற்றிற்கு முற்றிலுமாக அனுமதி இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.