தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணி மன்றம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44_வது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தூத்துக்குடி பால்பாண்டி நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மாவட்ட தலைவர் துரை தலைமையில் உணவு வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில், துணைத்தலைவர் கங்காராஜேஷ், மாநகர திமுக தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, நிர்வாகிகள் கார்த்திக், முருகன், ஆகாஷ், அர்ஜுன், பிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.