<p><b>ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில், தற்போது 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாலகுமரேசன் (45), ஆதவா அறக்கட்டளை நிறுவனரான இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.</p><p>இந்த நிலையில், கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு, ஹோட்டலில் இருந்தபோது&nbsp; 7 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி,&nbsp; 7 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில், தற்போது 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.</p>