<p><b>மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்துலாபுரம் பாலத்தின் அடியில் இறந்துகிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</b></p><p>விளாத்திகுளம் உட்கோட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முத்துலாபுரம் பாலத்தின் அடியில் நேற்று (29.02.2024) சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துது. மேற்படி பிரேதம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த நபர்,&nbsp; புளு கலர்&nbsp; SKC என்று எழுதப்பட்ட ஜட்டி டைப் டிரவுசர் அணிந்திருந்தார். மேலும் இடுப்பில் கருப்பு கலர் அரைஞாண் கயிறு ஆகியவற்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>எனவே மேற்படி இறந்த நபரை பற்றி பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உனடியாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக எண். 04638-233498, மாசார்பட்டி காவல் நிலைய எண். 94981-01856 மற்றும் மாவட்ட காவல் தனிப்பிரிவு அலுவலக எண்களான 0461-2340650, 2340651, 2340700 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p>