தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். வெளியிடப்பட்<wbr>டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:

01.01.2021 தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்- 2021 பணியானது இன்று முதல் நடைபெற உள்ளது. இன்று முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற் கொள்ளுதல், ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்கள் பெறப்படும்.

01.01.2021 அன்று 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள்

அதாவது 31.12.2002 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள்

வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர்

பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்றதொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை அனைத்து வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலர் களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்படி அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2021 பணிக்காக

சிறப்பு முகாம்கள் 21.11.2020 (சனிக்கிழமை), 22.11.2020

(ஞாயிற்றுக்கிழமை), 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020

(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. சிறப்பு முகாம் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி முடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விண்ண ப்பங்களை அளிக்கலாம்.

மேலும்,பொதுமக்கள் கைபேசி மற்றும் கணினியில் இணையதளம்

மூலமாகவும்,www.nvsp.in என்ற முகவரியில் உரிய ஆவணங்களை

சமர்ப்பித்து விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு மேற்கண்ட இணையதளத்தில் படிவம் 6-ல் தங்களது புகைப்படத்தினை அடையாளச் சான்றாகவும், ஆதார் அட்டையினை முகவரிச்சான்றாகவும் பதிவேற்றம் செய்தும் பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொது மக்கள் தகவல்களை பெறவும் மற்றும் இடர்பாடுகள் இருப்பின் தெரிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவைமைய இலவச தொலைபேசி எண் 0461-1950ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதி வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மற்றும் சிறப்பு முகாம்

வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன்,

சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகசாதன்(ஸ்ரீவைகுண்டம்), கீதாஜீவன் (தூத்துக்குடி), அனிதா ராதா கிருஷ்ணன் (திருச்செந்தூர்), மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏ.சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் (தி.மு.க.), பி.எம்.பால்ராஜ் (பா.ஜ.க.), சி.எஸ்.முரளிதரன் (காங்கிரஸ்), அழகுமுத்துபாண்டியன் (கம்யூனிஸ்ட் சி.பி.ஐ), வரதராஜ் (என்.சி.பி),அசோக்குமார் (பி.எஸ்.பி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.