தூத்துக்குடி அருகே கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
நிருபர்
November 21, 2022
தூத்துக்குடி அருகே கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் அருகில் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் ஆர்.சி தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் (37) என்பவர் கடந்த 18.11.2022 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் அருகில், ஒரு திருமண வாழ்த்து போஸ்ட்டரை ஒட்டிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் அரிக்கிருஷ்ணன் (20) தூத்துக்குடி பி&டி காலனி பகுதியைச் சேர்ந்த மரிய ஆனந்த் மகன் தன்ராஜ் (20) மற்றும் சிலர் முருகனிடம் தகராறு செய்து தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.</p><p>இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் வழக்குபதிவு செய்து அரிக்கிருஷ்ணன் மற்றும் தன்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>