நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை களை கட்டியது செம்மரி  கிடாய் ஒன்று ரூபாய் 65 ஆயிரம் வரை விற்பனை எனவும் மொத்தமாக 4 கோடி வரை விற்பனை நடந்திருப்பதாகவும்  கூறப்படுகிறது .

நெல்லை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையான  மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை களைகட்டி உள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாட உள்ள நிலையில் நெல்லை தூத்துக்குடி தென்காசி,  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஆடு வாங்குவதற்கு மேலப்பாளையம் ஆட்டு  சந்தையில் குவிந்தனர் .

சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி தென்காசி சுற்றுவட்டார பகுதி கால்நடை விவசாயிகள் மட்டுமின்றி விழுப்புரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடு வளர்ப்போர் மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து வரப்பற்றுள்ள செம்மரி கிடாய்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நெல்லை ஆட்டு சந்தையில் செம்மறி, பொட்டு குட்டி செங்குட்டி, மகிழம்பாடி உள்ளிட்ட ஆடு வகைகளும் வெள்ளாட்டு வகையில் கருப்பு கிடா,  கொடியாடு , பல்லையாடு உள்ளிட்ட வகைகளும் விற்பனைக்கு அதிக அளவில் வந்துள்ளது.

அதிகாலை தொடங்கிய ஆட்டுச் சந்தையில் தற்போது வரை 4 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு ஆட்டுக்கிடா ரூபாய் 65 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு கிடா பத்து முதல் 15000 வரை விற்பனை செய்யப்படுகிறது .