தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பால சண்முகதேவி வரவேற்புரையாற்றினார். தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின்னர் அவர் மாணவிகள் மத்தியில் பேசுகையில் :

இன்று நீங்கள் மாணவி நாளை மனைவி அடுத்து குடும்ப தலைவி என்று உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ள இருக்கிறீர்கள். சமீப காலமாக நடைபெறுகின்ற பல சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யார் என்று பார்த்தால் அதை 75 சதவீதம் பேர் பல்வேறு போதை பொருள்களை உட்கொண்டு நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை மறந்து அறியாமையில் தவறு செய்கின்றன.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் பள்ளி கல்லூரிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக  தற்போது நான் உங்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருக்கிறேன்

நீங்கள் பணம் கொடுத்து கல்வியையும் அறிவையும் பெறுகிறீர்கள்.அந்த காலக்கட்டத்தில் உங்கள் என்னம் உங்கள் நலனை பாதுகாப்பதும். எதிர்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் வாட்ஸ்அப், முகநூல் போன்றவற்றில் தேவையில்லாத பதிவுகளுக்கு லைக் கொடுக்க கூடாது.

கல்லூரி படித்த பின்பு நாம் கணவரை தேடும் போது நல்ல கல்வி படித்துள்ளாரா நல்ல பணிசெய்கிறாரா அவர் வாங்கும் சம்பளம் நம் குடும்பத்தை வழிநடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்று பல்வேறு வகையில் ஆராய்ந்து திருமணம் செய்து கொள்கிறோம். இதில் எப்படி கவனம் செலுத்துகிறோமோ அதே போல் நம்ம குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி உறவினர்கள் மத்தியில் தவறான வழிக்கு செல்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு  போதை பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துகூறி அதை உட்கொள்வதை தடுக்க வேண்டும்.

பல்வேறு போதை பொருள்களை உட்கொள்வதால் உடலுறுப்புகள் மூளை பாதிப்புகள் எற்பட்டு எல்லா வகையிலும் பாதிக்கப்படும் நிலைதான் வருகிறது. எனவே போதை பொருள் தடுப்பு குறித்த  விழிப்புணர்வை நீங்கள் அனைவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்

மதுவிலக்கு காவல்துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் மேரி சுபா, மாணவர் பேரவை பொறுப்பாளர் பேராசிரியர் பாலதீபஅரசி, கனிதத்துறை உதவி பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் வசந்தசேனா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியர் செல்வராணி நன்றியுரையாற்றினார்.