பாவேந்தர் தமிழ் மன்றம் சார்பில், பொட்டலூரணி கிராமத்தில்  திருவள்ளுவர் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே  உள்ள பொட்டலூரணி கிராமத்தில், பாவேந்தர் தமிழ் மன்றம் சார்பில் 28 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் மற்றும் திருவள்ளுவர் விழா நடைபெற்றது.

விழாவில், பொட்டலூரணி கிராம மன்றத்தின் செயலாளர் சங்கரநாராயணன் தலைமை வைக்கித்தார், மன்றத்தின் தலைவர் இராசா வரவேற்புரை ஆற்றினார்.

மன்ற உறுப்பினர் அழகுராசன் முன்னிலையில் நடைபெற்ற மாணவர் அரங்கம் நிகழ்ச்சியில், திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டி, குறள் நெறிக் கதைகள் சொல்லும் போட்டி, பெருஞ்சித்திரனார் பாடல் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, கோலப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்ற  மாணவர்களுக்கும் பரிசுகள்  வழங்கப்பட்டன.

அதே போல், மன்ற உறுப்பினர் இராமகிருட்டிணன் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் அரங்க நிகழ்ச்சியில், அண்மையில் மறைந்த  தமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன், தனித்தமிழ் இயக்கப் போராளி தேன்மொழி அம்மையார், சமூக ஆர்வளர்  வழக்குரைஞர் செம்மணி, கலைமாமணி கைலாசமூர்த்தி ஆகியோரின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் நிலவழகன், இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இயக்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வழக்குரைஞர்  இரமேஷ், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த சுஜித், உத்தரம் ஆகியோர் உள்ளிட்டோர்  கலந்துகொண்டு விழா உரையாற்றினர்.

மன்ற உறுப்பினர் வெங்கடேசு முன்னிலையில் நடைபெற்ற பாராட்டு அமர்வில், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பொட்டலூரணியைச் சேர்ந்த ஆசிரியர் கோயில்பிச்சை அவர்களுக்கு ஆசிரியமணி என்ற விருது வழங்கப்பட்டது. மதியழகன் தலையிலான தாமிரபரணிக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், தமிழாசிரியர் இராமசாமி, சைவ சபை கண்ணன், தொ.ப. மாசானமணி, பாளையங்கோட்டை கண்ணன், செல்வராசன் மற்றும் த ஊர் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியர் சங்கர் ராம் நன்றி கூறினார்.