தூத்துக்குடி தாளமுத்துநகர் மெயின்ரோட்டில் தையல்கடைக்காரர் கொலை வழக்கில்  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலதண்டாயுதநகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் கண்ணன் (49) என்பவர் தாளமுத்துநகர் மெயின்ரோட்டில் தையல்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மேற்படி கண்ணன் நேற்று (24.02.2022) இரவு அவரது கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணன் என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் முதல் நிலை காவலர்கள் ராமநாதன் மற்றும்  சுந்தர்சிங் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகர், தமிழரசன் மகன் ஜெயேந்திரேன் (22) மற்றும்  தாளமுத்துநகர் பாலதண்டாயுதநகர், முத்துப்பாண்டி மகன் ரமேஷ் கண்ணன் (18) மற்றும் ஒருவருடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக மேற்படி கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் ஜெயேந்திரேன் மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

கொலை செய்த நபர்களைகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.