கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தவறான செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவர் கைது.

கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 23.02.2022 அன்று பாலியல் தொந்தரவு தொடர்பாக தவறான செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று அளித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கழுகுமலை கரடிகுளம் ராமசாமி மகன் கதிரேசன் என்பவர் மேற்படி பாதிக்கப்பட்ட  பெண்ணின் வாட்ஸ்அப்பிற்கு  தவறான செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் கதிரேசனை கைது செய்தனர்.