முறப்பநாடு அருகே சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மணக்கரை கிராமம் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர்  மரியசித்திரகமல்ராஜ் இன்று ரோந்து பணி மேற்கொண்டபோது மணக்கரை வாய்க்கால் பாலம் அருகே மணக்கரையைச் சேர்ந்த முருகன் மகன் பாக்கியராஜ் (29) என்பவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக 3 மணல் மூட்டைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர்  மரியசித்ரகமல்ராஜ் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாக்யராஜை கைது செய்து இருசக்கர வாகனத்தையும், மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.