<p><b>எட்டையபுரம் நகர அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.</b></p><p>விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரம் நகர மெயின்பஜாரில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு, எட்டையபுரம் அதிமுக நகர&nbsp; செயலாளர் ராஜகுமார் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு&nbsp; வழங்கி கொண்டாடப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சுப்புலட்சுமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் செல்வி, இணை செயலாளர் சாந்தி, வார்டு செயலாளர்கள் கார்ட்டன் பிரபு, ரத்தினம்&nbsp; உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>