குடிநீர் தேவைக்காக கி.மீட்டர் தூரம் சென்று வரக்கூடிய அவலநிலை இருப்பதாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அலங்காரத்தட்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு கீழ அலங்காரத்தட்டு பகுதிகளில்,  பொதுமக்கள் தங்களது  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற வைப்புத்தொகை செலுத்தி ஆண்டு கணக்கில் ஆன பின்பும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக சுமார் 3 கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு நேரிலும், பதிவுதபால் மூலமும்  மனு அளித்து பல மாதங்கள் கடந்தும்  இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும்,  மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்  இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுவீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி, குடிநீர் பிரச்சனயை தீர்க்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாநகரச் செயலாளரும், சமூக ஆர்வலருமான செல்வக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கை வைக்கின்றனர்.