தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 176 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 176 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 992 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 590 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.