தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களில் கண்ணாடிகள் உடைத்து சேதம்!
நிருபர்
June 13, 2021
தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களில் கண்ணாடிகள் உடைத்து சேதம்!

தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ராஜீவ் நகர், பர்மா காலனி நிக்கிலேசன் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை நேற்று சில மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர்.

இதனையடுத்து, காலையில் எழுந்து வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பின்னர், வாகனங்களின் உரிமையாளர்கள் வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பைக்கில் வந்த 3 வாலிபர்கள் கற்களால் வீசி வாகனங் களை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.