குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதனையடுத்து, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர்  ஜூடி, உதவி ஆய்வாளர்  தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்  ஜெகநாதன், தலைமைக் காவலர்கள்  லட்சுமணன், தனிப்பிரிவு காவலர் சந்தோஷ் செல்வம், ஆகியோர் ரோந்து சென்றபோது இருவர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர், அவர்கள் போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இத்தகவலறிந்த  மாவட்ட   காவல்   கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  சம்பவ இடத்தை பார்வையிட்டு சமமந்தபட்ட நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சு வதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.