தூத்துக்குடி  மாவட்டத்தில் இன்று 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் 6 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 882 பேர் கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40542 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 914 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 33,3284-ஆக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று கிசிச்சை பலனின்றி உயிரிழந் தனர். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் 7011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.