ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி!
நிருபர்
May 04, 2026
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வெற்றி!

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஜி. சரவணன், 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஜி. சரவணன் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இறுதி வாக்கு விவரம்:

ஜி. சரவணன் ( த.வெ.க ) 58,814

எஸ்.பி. சண்முகநாதன் ( அதிமுக ) 57,628

எஸ். ஊர்வசி அமிர்தராஜ் ( காங்கிரஸ் ) 41,277

எஸ். சண்முகசுந்தரம் ( நாம் தமிழர் ) 13,153

த.வெ.க. வேட்பாளர் ஜி. சரவணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனை விட 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.