முத்துநகரில் முத்திரை பதித்து கணக்கை தொடங்கிய தவெக... ஸ்ரீநாத்தின் முழு பின்னணி இதோ!
நிருபர்
May 04, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொகுதிகளில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீநாத், இத்தொகுதியில் திமுகவின் வலுவான வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவனை சுமார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொகுதிகளில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீநாத், இத்தொகுதியில் திமுகவின் வலுவான வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவனை சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீநாத், விஜய்யின் திரைப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறார். விஜய்யுடன் கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்தே நடிகர் சஞ்சீவ் உள்ளிட்ட நண்பர்கள் வட்டாரத்தில் ஸ்ரீநாத் மிக முக்கியமானவர். விஜய்யின் முதல் திரைப்படமான 'நாளைய தீர்ப்பு' (1992) மூலம் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீநாத், விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வரை அவருடன் பயணித்துள்ளார்.

ஸ்ரீநாத் திரையில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டாலும், அவர் ஒரு திறமையான இயக்குநரும் கூட. சந்தானம் நடிப்பில் வெளியான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திரைப்படத்தை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. மேலும், 'வேட்டைக்காரன்', 'மாண்புமிகு மாணவன்', '12B', 'உள்ளம் கேட்குமே' மற்றும் 'உன்னாலே உன்னாலே' எனப் பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விஜய் தனது நம்பிக்கைக்குரிய நண்பரான ஸ்ரீநாத்தை களமிறக்கினார். தேர்தல் களத்தில் பல சவால்கள் ஸ்ரீநாத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டன:

முன்னதாக தவெக மாவட்டப் பொறுப்பில் இருந்தவர்கள் அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்தது பின்னடைவாகக் கருதப்பட்டது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் கீதாஜீவன் செல்வாக்கு மற்றும் திமுகவின் வாக்கு வங்கி ஸ்ரீநாத்தின் வெற்றியைத் தடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். இருப்பினும், இந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய ஸ்ரீநாத், விஜய்யின் தீவிர ஆதரவு மற்றும் தனது கடின உழைப்பால் தூத்துக்குடி மண்ணில் தவெகவின் கொடியை முதன்முதலாகப் பறக்கவிட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகைக்காக திரைமறைவில் நீண்டகாலமாக உழைத்து வந்த ஸ்ரீநாத், தற்போது நேரடியாக மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வாழ்வின் முதல் வெற்றியை அவரது உற்ற நண்பரே பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.