திருட்டு வழக்கு : 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை - ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நிருபர்
April 25, 2026
தூத்துக்குடி அருகே 2020-ல் தனியார் குடோன் ஷட்டரை உடைத்து ₹2.50 லட்சம் மதிப்பிலான பட்டாணி மூடைகளைத் திருடிய 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் குடோன் ஒன்றில் திருடிய வழக்கில், சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே, தண்ணீர் பந்தல் - அரசடிபனையூர் சாலையில் உள்ள ஒரு தனியார் குடோனின் ஷட்டரை மர்ம நபர்கள் உடைத்தனர். உள்ளே புகுந்த அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2,50,000 மதிப்பிலான 85 பட்டாணி பருப்பு மூடைகளை திருடிச் சென்றனர்.

இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தத் திருட்டில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (35), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பரமசிவன் (35), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ் (35) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான இறுதி அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையை முடித்த நீதிபதி பாக்கியராஜ் நேற்று ( 24.04.2026 ) தீர்ப்பை வழங்கினார்.

குற்றவாளிகள் மூவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குடோன் ஷட்டரை உடைத்ததற்காக தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2,000 அபராதமும், பொருட்களைத் திருடியதற்காக தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2,000 அபராதமும் என மொத்தமாக மூவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.4,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்திய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர், சிறப்பாகப் புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் வேல்முருகன், திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன் மற்றும் விசாரணைக்கு உதவிய தலைமை காவலர் தளவாய்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் வெகுவாகப் பாராட்டினார்.