தூத்துக்குடியில் வேட்பாளர் வீட்டில் ரூ.65 லட்சம் சிக்கியதால் பரபரப்பு!
நிருபர்
April 22, 2026
தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.62 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் கணேஷ் நகரில் உள்ள வேட்பாளரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 62 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பணம் பதுக்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தென்பாகம் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டிலும் பெரிய பணம் சிக்கியிருப்பது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.