முழுக்க முழுக்க மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகள் நிறைந்த விளாத்திகுளம் தொகுதியில், அதிமுக அறிவித்துள்ள விவசாயிகள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்பு ஒன்று திமுகவை ஆட்டம் காணச்செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தை கொண்டது. இங்கு மிளகாய் வத்தல் சாகுபடி பெருமளவில் நடைபெறுகிறது. கம்பு, மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

மேலும், வேம்பார் முதல் தருவைகுளம் வரை கடற்கரை, மீன்பிடி தொழில், உப்பள தொழில் நடக்கிறது. மேலும் கரிமூட்டம் தொழில் என பன்முகத் தொழில்கள் இங்கு உள்ளது.

விளாத்திகுளம், எட்டயபுரம் என 2 தாலுகாக்கள், ஓட்டப்பிடாரம் தாலுகாவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய யூனியன்களில் சில பகுதிகளும் அடங்கி உள்ளன. மேலும் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய நகர பஞ்சாயத்துகள் உள்ளன.

இந்த நிலையில், மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகள் நிறைந்த விளாத்திகுளம் தொகுதியில், விவசாயிகளின் வாக்குகளே முழுக்க முழுக்க வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. ஆகவே, விவசாயிகள் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளையே அத்தொகுதி மக்கள் எதிர்பாக்கின்றனர். ஆனால், அது தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாதது திமுகவை ரசிக்க முடியாத நிலைக்கு விவசாயிகளை ஆளாகியுள்ளது.

அதே வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக விளாத்திகுளம் தொகுதியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது பயிர்க்கடன் தள்ளுபடி என்பது உடனடி பலனாக விவசாயிகளின் தலையிலிருந்த கடன் சுமை நீங்கும். இது அவர்கள் அடுத்த பருவ சாகுபடியைத் தடையின்றித் தொடங்க உதவும். குறிப்பாக, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய ஆறுதலாக அமையும். எனவே, அதிமுகவின் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பு, அதிமுகவை நோக்கி விவசாயிகளின் வாக்கு வங்கியை நகர்த்த தொடங்கிவிட்டது.

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் விளையும் மக்காச்சோளம், மிளகாய், மற்றும் உளுந்து போன்ற பயிர்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் பெரும் ஆதங்கம்.

அதே போல, வைப்பாற்றில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றை மீட்கவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. மேலும், வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள உள்ளூர் தொழிலாளிகளுக்கு அனுமதி மறுத்து, குவாரிகள் அமைத்து லாரிகள் மூலம் மணல் அள்ளியது.

மிளகாய் மற்றும் வெங்காயம் போன்ற விளைபொருட்களைப் பாதுகாக்கப் போதுமான குளிர்சாதனக் கிடங்குகள் (Cold Storage) இல்லாதது விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. அதனால், விவசாயிகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசோ, சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது.

2021 முதல் திமுக ஆட்சியில் விளாத்திகுளம் தொகுதியில் விளைநிலங்கள் பெருமளவில் காற்றாலை நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், அதற்கு விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்கண்டேயன் முழு ஆதரவு கொடுத்ததும், இதனால் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருவதாகவும் விவசாய மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதே போல, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும் மற்றும் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதனை சரி செய்யாதது.

விளாத்திகுளம் தொகுதியில் பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை முழுமையாக விடுவிக்காமல் இழுத்தடிப்பு செய்தது. பயிர் காப்பீடு வழங்க கோரி ஒவ்வொரு முறையும் விவசாயிகளை போராட செய்தது. காட்டுப்பன்றிகளின் தொல்லையை கட்டுப்படுத்தத்தவறியது என

தொகுதி மக்களின் பல்வேறு  கோரிக்கைகள், குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக அரசோ, சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனோ நிறைவேற்றத் தர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தொகுதி விவசாய மக்களின் ஆதங்கமும், அதிமுக அறிவித்துள்ள பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பும் விளாத்திகுளம் தொகுதியில் கடைசி கட்டத்தில் வாக்குகளை திசை மாற வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் சத்தமில்லாமல் தங்களது வாக்குப்புரட்சியை திமுகவிற்கு எதிராக நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே விளாத்திகுளம் தொகுதியான விவசாயிகளின் ஆதரவால் இரட்டை இலை மலரப்போவதை இறுதி கட்ட தேர்தல் களம் உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.