முத்து நகரில் முந்திச் செல்லும் கீதா ஜீவன்... தடுமாறும் சி.த.செல்லப்பாண்டியன்!
நிருபர்
April 08, 2026
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் களத்தில் ஆரம்பத்தில் அதிமுக திமுக இரு கட்சி வேட்பாளர்களும் சம பலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினாலும், தற்போது களத்தில் திமுக வேட்பாளர் கீதா ஜீவனே முந்திச் செல்வதாக கள நிலவரம் உணர்த்துகிறது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் களத்தில் ஆரம்பத்தில் அதிமுக திமுக இரு கட்சி வேட்பாளர்களும் சம பலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினாலும், தற்போது களத்தில் திமுக வேட்பாளர் கீதா ஜீவனே முந்திச் செல்வதாக கள நிலவரம் உணர்த்துகிறது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 அடுத்தது இரண்டு முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு, அதில் ஒரு முறை மட்டுமே வெற்று பெற்றதோடு, 3 வது முறையாக 2026 தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் சி.த.செல்லப்பாண்டியன்.

திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் 2006 ல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் 2016, 2021 தொடர் வெற்றியை குவித்து, 2026 தேர்தல் களத்தில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி படு உற்சாகத்துடன் களமாடிவருகிறார் திமுக வேட்பாளர் கீதா ஜீவன்.

இத்தகைய சூழலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் களத்தில் ஆரம்பத்தில் அதிமுக திமுக இரு கட்சி வேட்பாளர்களும் சம பலத்தில் தேர்தல் பணிகளை தொடங்கினாலும், கூட்டணி கட்சிகளை அரவணைப்பது, அவர்களின் முழு அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு, பரப்புரை செய்திகளை பட்டி தொட்டியெங்கும் சேர்க்கும் வகையிலான பிரத்யேக செய்தி பரவலாக்கல் பணிகள், கட்சி களப்பணியாளர்களுக்கான உற்சாக விட்டமின்கள் என அனைத்து தளங்களிலும் திமுக வேட்பாளர் கீதா ஜீவனின் நேர்த்தியான முன்னெடுப்பு பணிகளால் முத்து நகரில் தேர்தல் களத்தில் திமுக தேர்தல் பணிகள் முந்திச் செல்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்கு அடுத்தப்படியாக பாஜகவை தவிர பெரிய அளவில் கூட்டணி கட்சிகள் பலம் இல்லாததும், பாஜக தரப்பிலும், உட்கட்சி தரப்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆதரவாளர்கள் தரப்பிலும் பெரிய அளவில் வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு ஒத்துழைப்பு இல்லாததாக சொல்லப்படுகிறது. மேலும் ஏஐ ( AI ) மூலமாக திமுக வேட்பாளருக்கு எதிராக வீடியோக்களை உருவாக்கி அதையே பெரும் பிரச்சாக யுக்தியாக நம்பி வருவதும், கட்சி களப்பணியாளர்களை சோர்வடையவிடாமல் விட்டமின்களை இறக்குமதி செய்வதில் கை இறுக்கம் காட்டுவதாலும் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் களத்தில் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளதாக தேர்தல் கள நிலவரத்தின் எதார்த்தம் உணர்த்துவதாக சொல்லப்படுகிறது.

கடந்த முறையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் கொஞ்சம் குறையலாமே தவிர, வெற்றி முகத்தில் தற்போது வரை கீதா ஜீவனே முன்னிலையில் இருக்கிறாராம்.