அவர் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரே... தூத்துக்குடி தவெக வேட்பாளரின் வழக்கமான தேர்தல் அட்ராசிட்டி!
நிருபர்
April 02, 2026
விஜய்யின் வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்த ஸ்ரீநாத், தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய்யின் வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்த ஸ்ரீநாத், தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தேர்தல் சம்பந்தமான பணிகளை துவங்கியுள்ள அவர், நேற்று தூத்துக்குடி பரப்புரையின் போது பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது சம்பந்தமான போட்டோக்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலானது.

தேர்தல் வந்தால் வேட்பாளர்கள் மக்கள் தங்களை எளிமையானவர்கள் என்று நம்ப வேண்டும் என்பதற்காக தெரு ஓரம் இருக்கும் டீக்கடைகளில் டீ குடிப்பாங்க, டீ போட்டு கொடுப்பாங்க, வடை சுடுவாங்க. இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் புதிதாக களம் இறங்கி இருக்கும் தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் ரோட்டோர கடையில் பஜ்ஜி போட்டு ஓட்டு சேகரித்தார்.

வழக்கமான தேர்தல் பிரச்சார அட்ராசிட்டிகளின் ஒன்றாக ரோட்டோர கடையில் பஜ்ஜி போட்டு ஓட்டு சேகரித்த தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்தை, அங்கு கூடியிருந்து பாத்த பொதுமக்கள்,

அவர் நடிகர் தான். அதற்காக இப்படி முதல் நாளே நடிப்பில் இறங்கினா, ஓவர் டோஸ் உடம்பு ஆகாதுனு அவர் மறந்திடாம என நகைத்தபடி நகர்ந்தனர்.