தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அரசின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ், நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று மொத்தம் 194 பயனாளிகளுக்கு இந்த இலவச இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கூட்டுடன்காடு, குமாரகிரி, கீழ தட்டாப்பாறை, உமரிக்கோட்டை, அல்லிகுளம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 194 பயனாளிகளுக்கும் இ-பட்டாக்களை நேரில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின்,  ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன் நாராயணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  சண்முகநாராயணன்,  கல்லாத்தான், செல்வம், சேரந்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும், பட்டா பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.