தூத்துக்குடியில் பரபரப்பு: கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு!
நிருபர்
February 13, 2026
தூத்துக்குடி அருகே கடலில் சங்கு குளிக்கச் சென்ற இளம் தொழிலாளி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே கடலில் சங்கு குளிக்கச் சென்ற இளம் தொழிலாளி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன் முனீஸ்வரன் (32). இவர் சங்கு குளிக்கும் தொழிலைச் செய்து வந்தார். நேற்று வழக்கம் போல, தனது சக தொழிலாளர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து ஒரு படகில் கடலுக்குள் சங்கு எடுப்பதற்காகச் சென்றார்.

கடலில் பணிகளை முடித்துவிட்டு அனைவரும் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பொன் முனீஸ்வரனுக்கு எதிர்பாராத விதமாக திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், அவரை உடனடியாக திரேஸ்புரம் கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

கடற்கரையில் தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.