தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி தவிர மற்ற 5 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஏற்கனவே அதிமுக முதல் வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ வான தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் திருச்செந்தூர் தொகுதிக்கு புதுமுக வேட்பாளரான, அம்மா பேரவை தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் சுயவிபரம்

பெயர்  -  கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்

தந்தை பெயர் - கே.ஆர்.முருகன்

ஊர்   -  3, விநாயகர் கோயில் தெரு, ஆறுமுகநேரி, திருச்செந்தூர்  தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்.

பிறந்த வருடம் - 09/02/1982

மனைவி பெயர்   -   அனிதா

மகன்   -   கவிஷ்( 10)

மகள்   -  நிவிகேஷ் ( 5 )

கல்வித்தகுதி   -   பி.காம்.,

தொழில் : மேலான்மை இயக்குநர்,

ஆர்.பி.ஜி. பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்

ஆர்.பி.ஜி. பிலிம் பிரைவேட் லிமிடெட்

பதவி ( அரசியல் ) : தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர்.

பதவி ( பொது ) : தலைவர், செம்பாக்கம் நகர வணிகர் சங்கம், சென்னை

தலைவர், ஆறுமுகநேரி விவசாய சங்கம்