நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளிடப்பட்டது. அதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு, நடப்பு எம்எல்ஏ சின்னப்பனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுயவிவரம்

பெயர்  -  போ.சின்னப்பன்

தந்தை பெயர் - போத்தி ரெட்டியார் ( ஆசிரியர் ஓய்வு)

தாயார் பெயர் -  வையம்மாள் (ஆசிரியை ஓய்வு)

ஊர்   -  கீழ விளாத்திகுளம், விளாத்திகுளம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்.

பிறந்த வருடம் - 21/10/1969

மனைவி பெயர்   -   கோகிலா (ஆசிரியை)

மகன்   -   பிரத்தீவி குமார்

மகள்   -   ஹனு வைசிகா

கல்வித்தகுதி   -   DEEE

1980  -  கழக அடிப்படை உறுப்பினர்,

1986 - கிளைக் கழகச் செயலாளர்,

1996 - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்,

2001 -  மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்,

2006 - 2011 விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,

2017 - கழக இலக்கிய அணி இணைச் செயலாளர்,

2019 - விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தற்போது உள்ளார்.