தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விபி சித்தன்நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் சுப்பையா (72/2019) என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக பெட்ரோல் ஊற்றி பற்றவைத்து கொலை செய்த வழக்கில் சுப்பையாவின் மகள் மூக்கம்மாள் (58/2025) என்பவரை நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று (01.12.2025) மேற்படி  மூக்கமாள் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய  காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சுதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.