தூத்துக்குடியில் மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் இன்று  திறக்கப்பட்டது.

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி திருமணமண்டபத்தில் மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பல மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பல இடங்களில் நடந்து கொண்டிருப்பதையும், உட்கார்ந்து கொண்டிருப்பதையும், அலைந்து கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஒரு நிமிடம் அவர்களுக்காக வருத்தப்படுவோம் பின்னர் கடந்து சென்று விடுவோம். ஆனால், அதையே அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக்கக்கூடிய நிறுவனம் தான் பேனியன்.

மேலும், நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் மெண்டல் ஹெல்த் பாலிசி உருவாக்குவதற்கு காரணமாக இருக்கக்கூடியதும் பேனியன் நிறுவனம் தான். ஒரு காலகட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு போய் மெண்டல் அசைலம் என்று சொல்லக்கூடிய ஒரு இடத்தில், ஒரு அறையில், அடைத்து வைத்து அதுதான் அவர்களின் வாழ்க்கைக்கான தீர்வு என்றும், கோவில்களில் விடுவது, கால்களில் சங்கிலியால் கட்டி அவர்களை வாழ்நாள் முழுவதும் அங்கேயே விட்டுவிட்டு மடியக்கூடிய ஒரு சோகத்தை எல்லாம் நாம் பார்த்து உள்ளோம்.

ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவருடைய அத்தனை உரிமைகளையும் நாம் எடுத்துக் கொள்வதற்கு, நமக்கு எந்த தகுதியும் கிடையாது. யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை குணப்படுத்தி அவர்களது உரிமைகளை அவர்களுக்கு திரும்பி தரக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

இது அனைத்திற்கும் ஒரு மிகப்பெரிய அளவிலே பங்காற்றி கொண்டு இருக்கும் இப்படிபட்ட நிறுவனமான பேனியன். தூத்துக்குடியில் இந்த மகிழ்வகத்தை உருவாக்குவதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து இப்படிபட்ட பல புதிய திட்டங்களை வாக்கு வங்கிக்காக இல்லாமல், தலைவர் கலைஞர் எப்படி சமூகத்திற்கான திட்டங்களை தொலை நோக்கோடு தந்தார்களோ, அது மாற்றுத்திறனாளியாக இருக்கட்டும் அல்லது மூன்றாம் பாலினம் என்று சொல்லக்கூடிய திருநங்கைகளாக இருக்கட்டும் இவர்களை எல்லாம் அரவனைத்து ஒரு ஆட்சி நடத்தி காட்டினாரே அதேபோல் அவருடைய வழியில் நம்முடைய முதலமைச்சர் மீண்டும் இல்லம் திரும்பக்கூடிய இப்படிபட்ட ஒரு மிகப்பெரிய திட்டத்தை துவக்கி இன்று பல்வேறு நிறுவனங்கள் அதை தன் கையில் எடுத்து மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்க கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

இந்த மென்டல் ஹெல்த் என்பது அடுத்தக்கட்டத்திற்கு உலகம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் அதிகப்பேர் ஜாதி வித்தியாசங்கள், ஆண் பெண் என்று வரக்கூடிய ஏற்ற தாழ்வுகள் என அனைத்துமே மனநிலையை பாதிக்ககூடிய விசயங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை மென்டல் ஹெல்த் என்பார்கள். இது அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனையாக எல்லோருக்குமான ஒன்று என்பதை நோக்கி நாம் நகர வேண்டும்.

அந்த நகர்வை இன்று முதல்கட்டமாக தூத்துக்குடியிலே மாற்றிருக்ககூடிய இந்த நிகழ்ச்சி, மிகப்பெரிய ஒரு நம்பிக்கையை தரக்கூடிய ஒரு நிகழ்வு இந்த மகிழ்வகம். இவை இங்கு உருவாகுவதற்கு எல்லா உதவிகளையும் செய்து தந்திருக்ககூடிய நம்முடைய அமைச்சராக இருக்கட்டும், நம்முடைய மாவட்ட ஆட்சியர், மாநகர மேயர், மாநகராட்சி ஆணையாளர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகியோருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, முதல்வர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிவக்குமார், உதவி இயக்குநர் தி பான்யன் நிறுவனம் செல்வி.கீர்த்தனா, நிறுவனர் ஆர் சோயா டிரஸ்ட் சரவணன், தி பான்யன் மருத்துவ இயக்குநர் அன்பு துரை மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.