<p><b>மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.</b></p><p><br></p><p>கடந்த 10.10.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட&nbsp; திருச்செந்தூர்&nbsp; லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைகண் மகன் கார்த்திக் (26), சாத்தான்குளம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகம் (51) ஆகிய 2 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்&nbsp; ஆல்பர்ட் ஜான்&nbsp; பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (16.11.2025) மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>